Tamilசெய்திகள்

2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வானது ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், இரண்டாவது அமர்வு கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கிடையே, 2022-23ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.

5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட்டில் வாக்காளர்களை கவருவதற்கான கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெறும் என பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.