2022-ம் ஆண்டுக்கான டால் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியல் – முதலிடத்தில் முகேஷ் அம்பானி
2022-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வணிக பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 2-ம் இடத்தில் உள்ளார். டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.
உலக அளவில் பணக்காரர்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியல் வருமாறு:
1. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி – சொத்து மதிப்பு 90.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
2. அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி – சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
3. எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் – சொத்து மதிப்பு 28.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
4. சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா – சொத்து மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
5. டி-மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி – சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
6. ஆர்சிலர் மிட்டல் நிறுவன தலைவர் லட்சுமி மிட்டல் – சொத்து மதிப்பு 17.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
7. ஓ.பி.ஜிண்டால் குழும தலைவர் சாவித்திரி ஜிண்டால் – சொத்து மதிப்பு 17.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
8. ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா -சொத்து மதிப்பு 16.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
9. சன் பார்மா நிறுவனர் திலீப் சாங்க்வி – சொத்து மதிப்பு 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
10. கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டாக் -சொத்து மதிப்பு 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.