2022 முதல் 2023 வரை 142 இந்திய வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளனர் – தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தகவல்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் ஊக்க மருந்து சோதனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 மார்ச் வரை இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் 142 பேர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 4342 விளையாட்டு வீரர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. போட்டியில் பங்கேற்ற 2596 பேரிடமும், போட்டிக்கு வெளியே 1746 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

தடகளத்தில் அதிகபட்சமாக 49 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக பளுதூக்குதலில் 22 பேரும் மல்யுத்தத்தில் 17 பேரும், சிக்கியுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்பட 13 கிரிக்கெட் வீரர்கள் சிகிச்சை பயன்பாடு விலக்கு கேட்டு இருப்பதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports