X

20 வயதிற்கு உட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப்: கலப்பு பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது

கென்யாவின் நைரோபியில் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது வருகிறது. இன்று கலப்பு அணி 4×400மீ ரிலே போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி பந்தய தூரத்தை 3:20.60 நேரத்தில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றது.

நைஜீரியா அணி 3:19.70 நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றது. போலந்து அணி 3:19.80 நேரத்தில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

இன்று காலை நடைபெற்ற ஹீட் பிரிவில் இந்திய அணி 3:23.36 நேரத்தில் கடந்து ஒட்டுமொத்தமாக 2-வது இடம் பிடித்திருந்தது. நைஜீரியா 3:21.66 நேரத்தில் கடந்தது.

ஏற்கனவே ஈட்டி எறிதலில் சீமா அன்டில் (2002), நவ்ஜீத் கவுர் தில்லோன் (2014) ஆகியோர் வெண்கல பதக்கமும், நீரஜ் சோப்ரா 2016-ல் தங்கப்பதக்கமும், 2018-ல் ஹீமா தாஸ் 400மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர்.