நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து விலைமதிப்புள்ள பெருட்களை கெள்ளையடித்த 43 வயது நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2015 முதல் 20 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக கடந்தாண்டு பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரோஸ் நியாஸ் ஷேக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மேட்ரிமோனி இணையதளத்தில் புகார் கொடுத்த பெண்ணிடம் பேசி பழகி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணிடம் இருந்துரோ.6.5 லட்சம் மதிப்புள்ள ரொக்க பணம், மடிக்கணினி உள்ளிட்ட மதிப்புமிக்க சில பொருட்களை அவர் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மடிக்கணினி, மொபைல் போன்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் நகைகளை போலீசார் மீட்டனர். 2015 முதல் விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து மேட்ரிமோனியில் பேசி பழகி திருமணம் செய்து அவர்களின் பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.