Tamilசெய்திகள்

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப் பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை
அறிவித்துள்ளது.

2,162 ராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள்
சேத்மடைந்துள்ளன என தெரிவித்துள்ளது.