Tamilசெய்திகள்

2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம் – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பு உள்ளதற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன்.

* நிலக்கரி காணாமல்போன விவகாரத்தில் தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனல்மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும்.

* இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை.

* குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* கடந்த காலம்போல் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.