Tamilசெய்திகள்

2.23 கோடி டன்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது – ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பதிலடி

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரெயில்வே துறைக்கும்
இடையேயான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து
வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே, 8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டு வந்து மத்திய அரசு நிறுத்தியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் டுவிட்டர் செய்திக்கு மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராகுல் காந்தி 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது என தெரிவித்திருந்தார். அவருக்கு எந்த தகவலும் முழுமையாக கிடைப்பதில்லை.
நம்மிடம் 2.23 கோடி டன்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.