ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் 29-ம் தேதி வெளியான 2.0 திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்தியாவில் ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்தன.
இந்நிலையில், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு நேற்றுவரை (சனிக்கிழமை) 63 கோடியே 25 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று கிடைக்கும் வசூலையும் சேர்த்து இந்த தொகை 90 கோடியை எட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், வெளியாகி வார இறுதிக்குள் 100 கோடி ரூபாய் என்ற வசூல் இலக்கை எட்டிய வெகுசில படங்களின் பட்டியலில் 2.0 திரைப்படமும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.