Tamilசெய்திகள்

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் சென்றார்

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார். இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு பிரான்ஸ் சென்றடைவார்.

பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும், பிரான்ஸ் நாட்டின் பிரமுகர்கள், இந்திய சமூகத்தினர், முக்கிய நிறுவனங்களின் சிஇஓ-க்கள் ஆகியோரை சந்திக்கிறார்.

இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு பிரான்ஸ் சென்றடையும் அவருக்கு ஓர்லி விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு கொடுக்கப்படும். 7.30 மணிக்கு செனட் சென்றடையும் மோடி, அதன் தலைவர் ஜெரார்டு லார்சரை சந்திக்கிறார். 8.45 மணிக்கு பிரான்ஸ் பிரதமர் எலிபெத் போர்ன்-ஐ சந்தித்து பேசுகிறார்.

அதன்பின் இந்திய சமூகத்திரிடையே உரையாற்றுகிறார். நள்ளிரவு பிரான்ஸ் அதிபர் அளிக்கும் தனிப்பட்ட விருந்தில் கலந்து கொள்கிறார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.