2வது மனைவியையும் விவாகரத்து செய்த நடிகர் அமீர்கான்

நடிகர் அமீர்கான் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம், எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது. எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன்-மனைவியாக இல்லாமல் ஒருவருக்கொருவர் துணையாகவும் ஒரு நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம்.

சில காலத்திற்கு முன்பே இதனை நாங்கள் திட்டமிட்டு, இப்போது அதனை செயல்படுத்த சரியான நேரம் என்பதை உணர்கிறோம். எங்கள் மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாக அவரை வளர்ப்போம், பாதுகாப்போம்.

இந்த முடிவுக்கு எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் புரிந்து கொண்டதற்கும் நன்றி. எங்கள் நலம் விரும்பிகளுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவெனில் எங்களைப் போலவே இந்த விவாகரத்தை நீங்களும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள் என்று நம்புகிறோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools