2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் மூலம் உலகை சுற்றும் விமானிகள்

இங்கிலாந்தை சேர்ந்த விமானிகளான ஸ்டீவ் ப்ரூக்ஸ் (வயது 58), மத் ஜோன்ஸ் (45) ஆகிய இருவரும் இணைந்து, 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டு, ராணுவத்தால் கைவிடப்பட்ட ‘ஸ்பிட்பயர்’ ரக போர் விமானத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளனர்.

முற்றிலும் சில்வர் உலோகத்தால் செய்யப்பட்ட ஒற்றை என்ஜின் கொண்ட இந்த ‘ஸ்பிட்பயர்’ விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றிவர ஸ்டீவ் ப்ரூக்ஸ் மற்றும் மத் ஜோன்ஸ் முடிவு செய்துள்ளனர். இதற்காக இங்கிலாந்தின் மேற்கு சுசெஸ் நகரில் உள்ள குட்வூட் விமான நிலையத்தில் இருந்து ‘ஸ்பிட்பயர்’ விமானத்தில் இருவரும் புறப்பட்டு சென்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools