Tamilவிளையாட்டு

1985 ஆம் ஆண்டில் இருந்த இந்திய அணி சிறந்த அணி! – ரவி சாஸ்திரி கருத்து

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவர் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர். அதேபோல் 1985-ல் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி உலக சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது. இந்த அணியிலும் ரவி சாஸ்திரி இடம்பிடித்திருந்தார்.

உலக கோப்பையை வென்ற 1983-ல் இருந்த அணியைவிட 1985-ல் இருந்த அணிதான் ஒயிட்பால் கிரிக்கெட் சிறந்தது. அந்த அணியால் தற்போதுள்ள விராட் கோலி தலைமையிலான அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘1985-ல் உள்ள அணியால் எந்த அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும். இதில் எந்த சந்தேகமுல் இல்லை.

1985-ல் இருந்து அணி 1983-ல் உலக கோப்பையை வென்ற அணியைவிட சிறந்தது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இரண்டு அணிகளிலும் நான் விளையாடியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். 1983 உலக கோப்பையிலும், 1985 உலக சாம்பியன்ஷிப் அணியிலும் விளையாடியுள்ளேன்.

1983-ல் இருந்த 80 சதவீத வீரர்கள் 1985-ல் விளையாடிய அணியில் இருந்தனர். ஆனால், சிவராமகிருஷ்ணன், விஷ்வநாத், அசாருதீன் போன்ற இளைஞர்கள் அணியில் இணைந்தனர். ஏற்கனவே அனுபவ வீரர்கள் இருந்ததால் சிறந்த அணியாக திகழ்ந்தது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *