18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டி – தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன்
மும்பையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரக்ஞானந்தா 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டான்.
பிரக்ஞானந்தா ஜெர்மனியைச் சேர்ந்த வாலன்டின் பக்கெல்ஸை எதிர்கொண்டார். 11-வது மற்றும் கடைசி சுற்றை டிரா செய்த நேரத்தில், அர்மேனியாவைச் சேர்ந்த ஷன்ட் சர்க்சியானை எதிர்த்து அர்ஜுன் கல்யாண் டிரா செய்ததால் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.
18 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ரஷ்ய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவைச் சேர்ந்த வங்கிதா அகர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.