Tamilவிளையாட்டு

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாடும் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக ஏழு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட பாகிஸ்தான் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு இரண்டு அல்லது மூன்று முக்கிய மைதானங்களை மட்டுமே பயன்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

தொடக்கத்தில் பைசலாபாத், முல்தான் போன்ற மைதானங்களில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பியது. ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இடங்கள் மற்றும் தேதிகளின் தற்காலிக வரைவு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை-ஆகஸ்டில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய குழுவின் வருகையை பிசிபி எதிர்பார்க்கிறது.

தற்காலிக தேதிகள் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடருக்கான இரண்டு முக்கிய மைதானங்களாக கராச்சி மற்றும் லாகூர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ராவல்பிண்டி மாற்று இடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வருவதால், கராச்சி மற்றும் லாகூரில் அதிக ரசிர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரை முல்தான் மற்றும் பைசலாபாத் போன்ற சிறிய மைதானங்களில் நடத்துவதற்கு பிசிபி முடிவு செய்துள்ளது.