15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் – தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இனி பாகிஸ்தான் உள்பட பிற அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

போட்டி நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:

நேற்றைய போட்டியில் இந்திய அணி 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்தது. இரண்டாவது பாதியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பெரிய ஸ்கோரை எடுத்து பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என நினைத்திருந்தோம். ஆனால் எங்களது திட்டம் பலிக்கவில்லை. இலங்கை வீரர்கள் நீண்டநேரம் நின்று சிறப்பாக பேட்டிங் செய்தனர். அர்ஷ்தீப் சிங் அற்புதமாக பந்து வீசினார்.சாஹல் மற்றும் புவி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசி விக்கெட்டுகளைப் பெற்றனர். நாங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன, கடந்த தொடர்களில் விளையாடும் போது சிலவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடித்துள்ளோம்.

உண்மையாகச் சொல்வதென்றால், இந்த நாட்களில் எங்களது சக வீரர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பார்ப்பதில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்சை விட்டதால் அர்ஷ்தீப் ஏமாற்றமடைந்தார். இது போன்ற தோல்விகள் அணி எப்படி ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பதைப் புரிய வைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools