Tamilசெய்திகள்

12 மணி நேரத்தில் வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும்

வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.  இது, இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மண்டலமாக மாறிய பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் ‘ஜாவத்’ புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 4-ம் தேதி அன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.