X

1000-திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களுக்கு மென்பொருள் வேலைவாய்ப்புகளை அமைத்துள்ள ஒரு இந்தியா எட் டெக்டெக் நிறுவனம் – நெக்ஸ்ட் வேவ் (NXTWAVE)

தமிழ்நாடு, 22 நவம்பர், 2022: மென்பொருள் துறையில் பல்வேறு பதவிகளுக்கான பயிற்சியை வழங்குவதில் முதன்மை வகிக்கும் நிறுவனமான நெக்ஸ்ட்வேவ் (NxtWave), கடந்த 18 மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் தனது மாணவர்களை பணியில்  அமர்த்தியுள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து அமேசான், கூகுள், டிலாய்ட், பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜியோ மற்றும் இதுபோன்ற பன்னாட்டு பெருநிறுவனங்களும் உள்ளடங்கும்தமிழ்நாட்டில் முப்பத்திற்கும் மேலான மாவட்டங்களில், பல கல்லூரிகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பல முன்னணி  கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் இப்பயிற்சியினை  பெற்று தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

 

தொழில்துறையில் மிகவும் அதிகமாக பணியில் சேர்க்கப்படும் நபர்களாக நெக்ஸ்ட்வேவ் மாணவர்கள் உருவெடுத்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  18 மாதங்களில் நாங்கள் கடந்திருக்கும் இந்த மைல்கல் சாதனை, நெக்ஸ்ட்வேவ் வழங்கும் பயிற்சியின் உயர்தரத்தையும், எங்கள் மாணவர்களின் திறன் நிலையையும்  வெளிப்படுத்துகிறதுஇந்த பயிற்சியை மாணவர்கள் முடிக்கும்போது பல நிறுவனங்கள்அவர்களை தங்கள் நிறுவனங்களில் எடுத்துக்கொள்ள காத்துக் கொண்டிருப்பதால், இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று நம்புகிறோம்என்று நெக்ஸ்ட்வேவ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி (CEO )திரு. ராகுல் அட்டுலூரி கூறினார்.

 

மேலும், “தொழில்துறையின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் அதிக ஊதியத்தை வழங்கும் பணிகளுக்கு மாணவர்களை தயார் செய்கிறோம்எமது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரும் ஆதரவிற்கு எங்களது நன்றியை தெரிவிக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் பெரிய  பெரிய சாதனைகளை எங்கள் மாணவர்கள் நிகழ்த்துவதைக் காண ஆவலோடு காத்திருக்கிறோம்; நடக்குமென்று உறுதியாக நம்புகிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

 

நாஸ்காம்(NASSCOM)  ஆய்வு அறிக்கையின்படி, இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்தைப்போல , ஏறக்குறைய இருமடங்கு விகிதத்தில் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறதுபுத்தம் புதிய தொழில்நுட்பங்களுக்கு தொடர்ந்து வளர்ந்து வரும் தேவை இருப்பதால் 2026 நிதியாண்டிற்குள் இத்தொழில்துறையின் வருவாய் $350 பில்லியனை எட்டும் என நாஸ்காம் (NASSCOM) எதிர்பார்க்கிறது. நன்கு பயிற்சி பெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. நெக்ஸ்ட்வேவ் மாணவர்களை பணிக்கு சேர்க்கும் நிறுவனங்களின் தலைமை செயலாக்க அதிகாரிகளும்(CEO ) மற்றும் மனிதவளத்துறை அதிகாரிகளும்(HR), நெக்ஸ்ட்வேவ்ல் இருந்து மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்திருப்பதற்கான காரணத்தை அவர்கள் கீழ்க்கண்டவாறு பகிர்ந்துகொண்டனர்

 

நெக்ஸ்ட்வேவ் நான் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்இங்கு வழங்கப்படும் கல்வி பாடத்திட்டத்தை தான் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களும் விரும்புகின்றன. இப்பாடத்திட்டத்தினாலும் மற்றும் பயிற்சியினாலும் இம்மாணவர்களை பணிக்கு சேர்க்கும் அனைத்து நிறுவனங்களும் ஆதாயம் அடைவது நிச்சயம்.” திரு. ஓம்கார் தாடப்பள்ளி –CEO, CAPRUS IT.

 

நெக்ஸ்ட்வேவ்ல் இருந்து பயிற்சி பெற்று வருகின்ற மாணவர்கள், எங்கள் நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.” – திரு. சைதன்யா அரிகாட்டிதலைவர் TA, abjayon.

 

இங்குள்ள தயாரிப்பு மற்றும் தரநிலைப்படுத்தல் செயல்பாட்டின் காரணமாக, திறன்மிக்கவர்களை  தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது“. –  திரு. ஜாய்நீல் ஆச்சார்யா, இணைநிறுவனர், Niroggyan.

 

நெக்ஸ்ட்வேவ்ன் மாணவர்கள் எந்த அளவிற்கு சிறப்பாக பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்றால், நிறுவனத்தில் அவர்கள் சேர்ந்த உடனேயே புராஜெக்ட்களுக்குள் அவர்களை பணியில் ஈடுபடுத்த எங்களால் முடிகிறது.”  – ரவி புளுசுநிறுவனர் மற்றும் CEO, Enmovil.

 

தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய பணியாளர்களின் திறனை மேம்படுத்தி வழங்கக்கூடிய நிறுவனமாக நெக்ஸ்ட்வேவ் இருக்கிறது.” – திரு. ராம்மேலாளர் – HR, PurpleTalk.

 

செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங் (ML), ஃபுல் ஸ்டேக் (FullStack) மற்றும் இதுபோன்ற பல நவீன தொழில்நுட்பங்களில் நெக்ஸ்ட்வேவ் பயிற்சியளிக்கிறதுநெக்ஸ்ட்வேவ் வழங்கும் பயிற்சியின் மூலம் அவர்கள் படித்த பிரிவு, டிகிரி, CGPA மற்றும் முன்பே கொண்டிருக்கும் கோடிங் அறிவு எதுவாக இருப்பினும் சிறப்பான மென்பொருள் துறை தொழில்களுக்கு தயார்நிலையில் உள்ளவராக மாறமுடியும்.  

 

மேலும் தகவல்களுக்கு, காணவும்: www.ccbp.in