X

100 வது ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த கே.எல்.ராகுல்

ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 60 பந்தில் 5 சிக்சர்,
9 பவுண்டரி உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்த போட்டி கே.எல்.ராகுலின் 100-வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 100வது போட்டியில் சதமடித்த ராகுலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.