100 மின்சார ஏ.சி பஸ்கள் வாங்க டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு

தமிழக போக்குவரத்து துறைக்கு 100 மின்சார ஏ.சி. தாழ்தள பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதை செயல்படுத்தும் விதமாக இப்போது 100 ஏ.சி. மின்சார பஸ்கள் வாங்குவதற்கு அரசு டெண்டர் கோரி உள்ளது. மின்சார பஸ்களுடன் சார்ஜிங் தீர்வு மற்றும் டிப்போ மேம்பாடு பணிகளுக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் ஏ.சி. பஸ்கள் வழங்கும் நிறுவனம், சார்ஜிங் மையம் மற்றும் சர்வீஸ் மையத்தையும் அமைத்து தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news