புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரசில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் 100 நாட்களுக்குள் அறிவிக்கப்படும். பிப்ரவரி 1-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். பா.ஜ.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் பட்ட கஷ்டங்களுக்கு விடுதலை கிடைக்க 100 நாட்கள் நாம் கடுமையாக பணியாற்ற வேண்டும். காந்தியின் நாடு வேண்டுமா ? கோட்சேவின் நாடு வேண்டுமா? என மக்களிடம் கேட்க வேண்டும். தற்போது நடக்கும் மோடியின் ஆட்சியின் தான் கோட்சே ஆட்சி. காந்தியின் கொள்கைக்கு எதிரான ஆட்சி.
தமிழகத்தில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆட்சியில் பெண்கள் பஸ்சில் இலவசமாக செல்ல முடிகிறது. மகளிர் உரிமை தொகையை பெற முடிகிறது. ஆனால் புதுச்சேரியில் அறிவித்த திட்டங்கள் ஒரு பெண்ணுக்கு கூட போய் சேரவில்லை. இதே தான் மோடி ஆட்சியின் நிலையும். இங்கே சின்ன மோடி. அங்கே பெரிய மோடி. இருவரும் பீலர்.. பொய்யர்.. இவர்களை தூக்கி எறிய எல்லா மட்டத்திலும் இறங்கி வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.