X

100 நாட்களை எட்டியது காந்தாரா- மகிழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் ‘காந்தாரா’ திரைப்படம் வெளியிடப்பட்டது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்நிலையில், ‘காந்தாரா’ திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. இது குறித்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளத்தில், “நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம் நமது வேர்களை திரும்பி பார்க்க வைத்து கலாச்சாரத்தின் மீது பிரம்மிப்பை ஏற்படுத்தும். இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.