Tamilசினிமா

100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் – நடிகர் விஜய் தேவரகொண்டா அறிவிப்பு

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘குஷி’. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ.70.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் தனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, எனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை எங்கள் குடும்பங்களுக்கு தருகிறேன். அடுத்த பத்து நாட்களில் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்குவேன். தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்தத் தொகை வழங்கப்படும். அப்போது தான் குஷியின் வெற்றி எனக்கு முழுமையடையும் என்று பேசினார்.