Tamilவிளையாட்டு

10 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய டிவிசன் அணி!

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டிவிசன் அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டமொன்றில், தெற்கு ஆஸ்திரேலியன் – நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.

முதலில் தெற்கு ஆஸ்திரேலியன் அணி பேட்டிங் செய்தது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் ரோக்சனா வான்-வீனின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெற்கு ஆஸ்திரேலியன் அணியின் வீராங்கனை வரிசையாக வெளியேறினார்கள். தொடக்க வீராங்கனை பெபி மான்செல் மட்டும் தாக்குப்பிடித்து 4 ரன்கள் எடுக்க அந்த அணி 10 ரன்னில் சுருண்டது.

இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் மற்ற ஆறு ரன்களும் ‘வைடு’ மூலமாக வந்ததுதான். பெபி-ஐத் தரவிர மற்ற வீராங்கனைகள் டக்அவுட்டில் வெளியேறினார்கள். 10 ரன்னில் ஆட்டமிழந்தாலும் 10.2 ஓவர்கள் தாக்குப்பிடித்தது.

ரோக்சனா 2 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 2.5 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *