10 மாநிலங்களைச் சேர்ந்த 10 பாராளுமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெறுகிறது
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து, காலியாக உள்ள அந்த 10 ராஜ்யசபை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் 10 ராஜ்யசபை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும். காலியாக உள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஜூலை 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.