1.26 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. வாரந்தோறும் மெகா முகாம்களை நடத்தி ஒரு நாளில் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகளை செலுத்தியது.

முதல் டோஸ் செலுத்தியவர்களில் ஏராளமானோர் 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்று 8-வது மெகா முகாம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில வீடு தேடி தடுப்பூசி  திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 1.26 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. வீடு தேடி தடுப்பூசி திட்டத்தில் தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.