1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளனர். இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி பகுதியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளின் எண்ணிக்கையும் பட்டியலிடப்பட்டு உள்ளது. ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா இவற்றில் ஏதாவது ஒன்று. ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார் சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார் ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் ரவா கேசரி, சேமியா கேசரி, வாரத்தில் 2 நாட்கள் உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கவும் அதில் கூறப்பட்டு உள்ளது.