X

1 கோடி பார்வையாளர்களை கடந்த விக்ரம் பட டிரைலர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’.திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த ‘பத்தல பத்தல’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘விக்ரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 1 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் முதல் இடத்தில் உள்ளது. அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.