ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, கால் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை சானியா ஜோடி எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், ஸ்லோவேனியா-செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா ஜோடி இன்று சந்தித்தது. ஆக்ரோஷமாக விளையாடிய சானியா ஜோடி, எதிரணியை பந்தாடி 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் வென்றது. இதன் மூலம் சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
குழந்தை பெற்ற பிறகு களம் இறங்கியுள்ள சானியா மிர்சா, அவர் விளையாடும் முதல் தொடரிலேயே கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.