தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்கடன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று சென்றார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர்.
தளபதி பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. முக்கிய தலைவர்கள் பிபின் ராவத் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்கிறார். அப்போது ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பது குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.