தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று சென்றார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர்.
குன்னூர் பஸ் நிலையததில் இருந்து 5. கி.மீ. தொலைவில் உள்ள காட்டேரி பூங்கா, நஞ்சப் சத்திரம் மலைப்பகுதி பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
அந்த இடத்தில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெலிங்டன் வந்துள்ள விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர். சவுத்ரி ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவருடன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு சென்றுள்ளார்.