ஹாலே ஓபன் டென்னிஸ் – மெத்வதேவை வீழ்த்தி ஹர்காக்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், போலந்தைச் சேர்ந்த வீரர் ஹூபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஹர்காக்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.