X

ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷுக்கு ரூ.2 கோடி பரிசு – கேரள அரசு அறிவிப்பு

கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளிப்பது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

கேரள கல்வித் துறையில் துணை இயக்குநராக (விளையாட்டு) இருக்கும் ஸ்ரீஜேஷுக்கு இணை இயக்குநராக (விளையாட்டு) பதவி உயர்வு வழங்க முடிவெடுக்கப்பட்டன. அவருக்கு மேலும் ரூ. 2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒலிம்பிக்கில் பங்கேற்ற 8 கேரள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்குவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.