ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவு
ஹவாயின் தீவிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம் நாலேஹுவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலும், அதன்பின், சுமார் 20 நிமிடம் கழித்து அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இரண்டாவதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிங்கள் குலுங்கின. அப்பகுதியின் வீட்டிலுள்ள பொருட்கள் கீழே விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. முதல்கட்ட தகவலின் படி எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.