X

ஹர்பஜன் சிங் மற்றும் யுவரஜ் சிங் வெளியிட்ட ஜாலி வீடியோ!

ஹோலி பண்டிகை இந்தியாவில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹோலி பண்டிகை கொண்டாடி வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஹோலி பண்டிகையை எங்களை போல கொண்டாடாதீர்கள் என ஜாலியாக அட்வைஸ் செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யுவராஜ் சிங் கழிப்பறையில் இருந்து வெளியே வந்து ஹர்பஜன் சிங்கின் முகத்தில் வண்ணங்களை பூசி ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதுபோல ஹர்பஜன் சிங்கும் யுவராஜ் முகத்தில் வண்ணங்களை பூசி வாழ்த்து தெரிவித்தார்.

யுவராஜ் சிங்கிடம் நீ இப்போது கழிப்பறையில் இருந்து தானே வந்தாய் என்று கேட்டார். உடனே யுவராஜ் மன்னித்து விடு என சிரித்தப்படி கூறினார். மேலும் எங்களை போல ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டாம். சுகாதாரமான முறையில் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என யுவராஜ் கூறினார்.

இதற்கு ஹர்பஜன் சிங் நீ வண்ணம் தான் பூசினாயா அல்லது வேறு ஏதும் பூசினாயா என கிண்டலாக பேசி அனைவருக்கும் இனிய ஹோலி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.