`இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. முக்கியமாக ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.
படம் பற்றிய இயக்குநர் சஞ்சய் பாரதி பேசும் போது,
என்னுடைய நாயகன் விருப்பம் மிகவும் குறுகியதாக இருந்தது. மிக முக்கியமாக திருமணமாகாத ஒரு இளம் நாயகன் நடிக்க வேண்டியிருந்தது. ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடிக்க மிகவும் பொருத்தமாக இருந்தார். நாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. மார்ச் இரண்டாவது பாதியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறோம். தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.