ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான் பாலிவுட் நடிகை
`இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார். `தனுசு ராசி நேயர்களே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இரண்டு நாயகிகளில் ஒரு நாயகியாக பாலிவுட்டின் ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.
ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.