ஹமாஸ் – இஸ்ரேல் போரில் தெளிவற்ற நிலையில் சீனா

கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.

தற்போது 5-வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

இந்நிலையில், சீனா இப்போரில் யாரை ஆதரிக்கிறது என இதுவரை தெளிவாக கூறவில்லை. “இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகைமையை கைவிட்டு பொது மக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம். அனைத்து விதமான வன்முறையையும் பொதுமக்களின் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம்” என சீனா அறிக்கை வெளியிட்டு நிறுத்தி கொண்டது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சீனா நடுநிலை வகிக்க முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news