ஹமாசால் தான் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

இஸ்ரேல், ஹமாஸ் இடையே மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன. ஆனால், ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது எனக்கூறி, இஸ்ரேல் ராணுவம் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன், இடைநிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் பொதுமக்களுக்கு தெளிவான பாதுகாப்பை ஏற்படுத்துவது மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்பதை தெளிவு படுத்தினேன். போர் நிறுத்தம் ஏன் முடிவுக்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஹமாசால் அது முடிவுக்கு வந்தது. ஹமாஸ் அமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். போர் நிறுத்தம் முடியும் முன்பே அது ஜெருசலேமில் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தி 3 பேரைக் கொன்றது. அமெரிக்கர்கள் உட்பட மற்றவர்களைக் காயப்படுத்தியது. போர் நிறுத்தம் முடிவதற்குள் அது ராக்கெட்டுகளை வீசத் தொடங்கியது. சில பிணைக்கைதிகளை விடுவிப்பதில் அது செய்த கடமைகளை மறுத்தது என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news