Tamilசினிமா

ஹன்சிகாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

2008-இல் வெளியான ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இப்படத்திற்கு பிறகு கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன், பிஸ்கோத் உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார். தற்போது, மலையாளத்தில் வெற்றிபெற்ற கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷை கதாநாயகியாக வைத்து இயக்கியுள்ளார்.

இந்நிலையில் திமிழில் முன்னணி நடிகையாக விளங்கும் ஹன்சிகாவை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். காமெடி ஹாரராக உருவாகும் இப்படத்திற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண், போக்கஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெனும், வசன எழுத்தாளராக சித்தார்த் சுபாவெங்கட்டும், பாடல் வரிகளுக்காக கபிலன் வைரமுத்தும் இணைந்திருக்கிறார்கள். படத்தில் பணிபுரிய இருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.