X

ஸ்ருதி ஹாசனின் ‘இனிமேல்’ டீசர் இன்று மாலை வெளியாகிறது

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ மற்றும் லியோ போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். இந்த பாடலுக்கான போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த பாடலின் டீசர் இன்று (மார்ச் 21) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கமல்ஹாசன் நிறுவனம் சார்பில் உருவாகும் பாடலில் லோகேஷ் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.