ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா! – மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது

நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் வைகாசி மாதம் 3ம் நாள் (17.05.2019) வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ கூர்ம அவதாரத்தின மேல் ஸ்ரீலக்‌ஷ்மி நரசிம்மர் அருள்பாலிக்கும் சன்னதியை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ளார். இந்த சன்னதியில் கீழ்காணும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், மஹா அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பகவத் பிரார்த்தனை, புண்யாஹவாசனம், வேத பாராயணம், 108 வகையான மூலிகளைகளால் மூல மந்திர ஹோமம், ஸ்வாதி நக்‌ஷத்திர ஹோமம், ஸ்ரீ மன்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மஹா பூர்னாஹுதி, தீபாராதனை, மூலவர் ஸ்ரீ கூர்ம லக்‌ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, அரிசி மாவு போன்ற 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
இந்த யாகத்தில் ருண ரோக நிவர்த்திக்கான பழங்கள், புஷ்பங்கள், வாசனாதி திரவியங்கள், மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா மற்றும் ஸ்வாதி நக்‌ஷத்திர ஹோமத்தில் கலந்து கொண்டு ருண ரோக நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்து அஷ்ட, ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்கியத்துடன் ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513,
வேலூர் மாவட்டம், தொலைபேசி : 04172-230033, செல் : 9443330203
FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: temples