ஸ்ரீரெட்டி வெளியிட்ட திரிஷாவின் சர்ச்சை புகைப்படம்!

தெலுங்கு திரையுலகில் நடிகர், இயக்குனர் என திரையுலகை சேர்ந்த பலரும் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. நிர்வாண போராட்டமும் நடத்தினார். இவரது பாலியல் குற்றச்சாட்டில் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கினர்.

தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தவறாக நடந்ததாகவும் குற்றம்சாட்டினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் புகார் கூறினார். ஐதராபாத்தில் அவருக்கு மிரட்டல்கள் வந்ததால் தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.

இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் திரிஷாவுடன் ராணா நெருக்கமாக இருந்து கன்னத்தில் முத்தமிடும் படத்தையும், அவரது தம்பி அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தையும் தற்போது வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அந்த படங்களின் கீழே “ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவோ பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார். ஆனால் அவருக்கு தனது மகன்கள் ராணா, அபிராமை ஒழுங்காக வளர்க்க தெரியவில்லை. ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் இருந்தார். அவரைப்போன்று பேரன்களும் உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

திரிஷாவும், ராணாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திரிஷாவை காதலிக்கவில்லை என்று ராணா மறுத்து வந்தார். இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools