ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சிலை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது.

வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று சிலையை திறந்து வைத்து நாட்டுடமையாக்குகிறார். நிகழ்ச்சியின் போது, ராமானுஜரின் வாழ்க்கை பயணம் மற்றும் போதனைகள் குறித்த 3D விளக்கக்காட்சி காட்சிப்படுத்தப்படும், மேலும் சிலையைச் சுற்றியுள்ள 108’திவ்ய தேசங்களின் மாதிரிகளை மோடி பார்வையிடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools