X

ஸ்ரீபெரும்பதூரில் அமைக்கப்படும் ஏரோஹப் அடுத்த ஆண்டு முதல் செயல்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் ஏரோ ஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கு ஏரோஹப் திட்டம் உதவும் என்றும் இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமையும்.

வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகள் உள்ளது.

ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதி என்று அரசு தெரிவித்துள்ளது.