Tamilவிளையாட்டு

ஸ்மித், வார்னர் இருவரையும் ரசிகர்கள் நல்ல விதமாக நடத்துவார்கள் – மொயீன் அலி நம்பிக்கை

ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். தற்போது தடை முடிந்துள்ளதால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி ஆஷஸ் தொடர் நடக்கிறது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் அதிக அளவில் ஈடுபடுவார்கள். மேலும், இங்கிலாந்து ரசிகர்களும் கேலி கிண்டல் செய்வார்கள்.

ஆஷஸ் தொடரின்போது பால் டேம்பரிங் விவகாரத்தை வைத்து இருவரையும் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இருவரும் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘அவர்களை மிகுந்த அளிவில் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தொடரை சந்தோசமாக விளையாட வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால், அது வேடிக்கையாகத்தான் இருக்கும். நாம் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள். நாம் மனிதர்கள். நமக்கு உணர்வுகள் இருக்கிறது.

அவர்கள் சிறந்த மக்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரையும் நல்லவிதமாக நடத்துவார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டை பற்றி பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *