Tamilசெய்திகள்

ஸ்மார்ட்போன் சந்தையில் களம் இறங்கிய கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து புதிய மாடல் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் அறிமுகமானது.

புதிய பிக்சல் ஃபோல்டு மாடலிலும் கூகுள் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7.6 இன்ச் ஃபோல்டபில் ஸ்கிரீன், 5.8 இன்ச் வெளிப்புற ஸ்கிரீன், இரண்டிலும் OLED பேனல் மற்றும், 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. பிக்சல் ஃபோல்டு மாடலில் உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீர் ஹிஞ்ச் அதிக உறுதியாகவும், எளிதில் ஸ்கிராட்ச் ஆகாத வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IPX8 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது. இதையே செல்ஃபி கேமராவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் 10.8MP அல்ட்ரா வைடு கேமரா, 10.8MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா சென்சார்களுடன் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் உள்ளது.

கூகுள் பிக்சல் ஃபோல்டு அம்சங்கள்:

7.6 இன்ச் 1840×2208 பிக்சல் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் 5.8 இன்ச் 1080×2092 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கூகுள் டென்சார் G2 பிராசஸர் டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் 12 ஜிபி ரேம் 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆண்ட்ராய்டு 13 டூயல் சிம் ஸ்லாட் 48MP பிரைமரி கேமரா, OIS 10.8MP அல்ட்ரா வைடு கேமரா 10.8MP டெலிபோட்டோ கேமரா 9.5MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX8 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E, ப்ளூடூத் 5.2LE யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 2 4821 எம்ஏஹெச் பேட்டரி 30 வாட் வயர்டு சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்

கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் போர்சிலைன் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 410 என்று துவங்குகிறது. இதன் 512 ஜிபி மெமரி மாடல் விலை 1919 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்து 240 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்க இருக்கிறது.