X

ஸ்பின்ன்ராக மாறிய புஜரா- வைரலாகும் வீடியோ

Cheteshawr Pujara will eager to make a big contribuition. Photo: Twitter/BCCI

2022-ம் ஆண்டுக்கான கவுண்டி சாம்பியன்ஷிப்பின் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சசெக்ஸ் மற்றும் லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூலை மாதம் 11-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சசெக்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சசெக்ஸ் அணியில் தான் இந்திய அணி வீரர் புஜாரா விளையாடுகிறார்.

அதன்படி களமிறங்கிய சசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 588 ரன்கள் சேர்த்தது. புஜாரா 46 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து லீசெஸ்டர்ஷைர் முதல் இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 529 ரன்கள் எடுத்தது. இதில் 3 பேர் சதமும் ரிஷி படேல் 99 ரன்களும் அடித்திருந்தனர். கொலின் அக்கர்மேன் 167 ரன்னிலும் முல்டர் 129 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டியில் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா லெக் ஸ்பின்னராக மாறினார். ஒரு ஓவர் மட்டுமே வீசிய அவர் 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் புஜாரா ஒருமுறை மட்டுமே பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம் 41.5 ஓவர்கள் வீசி ஆறு விக்கெட்டுகளை புஜாரா வீழ்த்தியுள்ளார். சசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சுழற்பந்து வீசியது வீடியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.