ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நாடாக உள்ளது – மத்திய அமைச்சர் தகவல்
டெல்லியில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் இந்தியா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையின் மூலம் கடந்த கடந்த எட்டு ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 300 லிருந்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தீர்மானிக்கும். உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதில் உலகில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. ஆராய்ச்சி, கல்வி, தொழில் துறை நிறுவனங்களுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம்,கணினி, தகவல் தொடர்புத் துறையை தொடர்ந்து பிற துறைகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும்.
வேளாண் மற்றும் பால்வளத்துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.