ஷாலினி வெளியிட்ட நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் வைரலாகிறது

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் புதிய புகைப்படத்தை அவரது மனைவி நடிகை ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூலாக அஜித் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema